உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு மின் ஊழியர்கள் மீது புகார்

வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு மின் ஊழியர்கள் மீது புகார்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வில்லியரேந்தலில் மின்வாரிய ஊழியர்கள் அனுமதி இன்றி நன்கு வளர்ந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்தாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.திருப்புவனத்தில் வாழை, நெல், கரும்பு, தென்னை விவசாயம் நடைபெறுகிறது.வைகை ஆற்று பாசனம் என்றாலும் பெரும்பாலும் மின்மோட்டார் வைத்துள்ள விவசாயிகளே வாழை, தென்னை சாகுபடி செய்கின்றனர். திருப்புவனம் அருகே வில்லியரேந்தலில் மின் கம்பி அறுந்து விழுந்து ஒரு வாரம் ஆகியும் மின்வாரிய ஊழியர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.தொடர்ந்து விவசாயிகள் புகார் அளித்ததால், ஊழியர்கள் மின்கம்பி செல்லும் வழியில் இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டனதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை