உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளி மாணவருக்கு பாராட்டு

பள்ளி மாணவருக்கு பாராட்டு

தேவகோட்டை: தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் தேசிய தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் பங்கேற்க தகுதி பெற்றார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 66 ஆவது குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூரில் நடந்தன. அதில் தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் தீஷ்வா உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடத்தை வென்றார். டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நாக்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு பங்கேற்க தகுதி பெற்றார். பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா, தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் சேவியர் ராஜ், மாணவர் இல்ல இயக்குநர் விக்டர் டிசோசா ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை