மேலும் செய்திகள்
வயல்களில் கருவேல மரங்கள் அகற்ற முடியாமல் கவலை
04-Sep-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே விவசாயம் செய்யாமல் தரிசாக விடப்பட்ட நிலங்கள் காடுகளாய் மாறி வருவதால் மண்ணின் உயிர்ப்புத்தன்மை கேள்விக்குறி ஆவதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர் இவ்வொன்றியத்தில் மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை உள்ளிட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நன்செய் நிலங்கள் உள்ளன. இங்கு மூன்று போகம் வரை நெல் சாகுபடி நடந்த நிலையில், பல ஏக்கர் பரப்பு நிலங்கள் சில வருடங்களாக தொடர் சாகுபடி இன்றி காடுகளாய் மாறி வருகிறது. நிலங்களை வைத்திருக்கும் பலர் பல்வேறு நகரம், நாடுகளில் தொழில் போக்குவரத்து நிமித்தமாக சென்று விடுவதாலும், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களாலும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் எந்த விவசாயப் பணிகளும் நடைபெறவில்லை. இதனால் அருகே ஆர்வமுள்ள மற்ற விவசாயிகளின் நிலங்களும் தரிசாகவே கிடக்கிறது. இதே நிலை நீடித்தால் வயல்கள் அனைத்திலும் உயிர்ச்சத்து குறைந்து வறண்ட நிலமாக மாறிவிடும் என் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். எனவே அழிந்துவரும் பாசன நிலங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வேளாண் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து மீண்டும் சாகுபடி பணிகளை துவக்க விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
04-Sep-2025