மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
5 hour(s) ago
பயிற்சி முகாம்
5 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
5 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
5 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
5 hour(s) ago
தேவகோட்டை:சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தியை, கட்சியில் இருந்து நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக கட்சியின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் காங்., கட்சியினர் இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். மாவட்ட தலைவராக சத்தியமூர்த்தி பதவி வகித்தார். சில நாட்களுக்கு முன் அவர் பதவி பறிக்கப்பட்டு, சஞ்சய் காந்தி என்பவர் மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால், சஞ்சய் காந்தி தலைமையை ஏற்காத ஒரு கோஷ்டி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறது.இந்நிலையில், தேவகோட்டை நகர காங்., சார்பில், அதன் தலைவர் லோகநாதன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்றாலும் எம்.பி., கார்த்திக்குக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது. மாவட்ட முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், முன்னாள் நகராட்சி தலைவர் வேலுசாமி, அகில இந்திய கமிட்டி உறுப்பினர் மீரா உசேன், மாவட்ட நிர்வாகிகள் காளையார்கோவில் ஆரோக்கியசாமி, கல்லல் உடையப்பன், இருதயராஜ், மானாமதுரை கணேசன், அகரம் ஆறுமுகம், நஜ்முதீன் உள்ளிட்டோர் பேசினர்.நிர்வாகிகள் பேசியதாவது:கார்த்தி எம்.பி., 'டிவி'க்கு பேட்டியளித்த போது பிரதமர் மோடிக்கு எதிராக தகுதியானவர் யாருமில்லை என கூறியுள்ளார். நெறியாளர், முன்னாள் தலைவர் ராகுல், தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை குறிப்பிட்டு கேட்டபோது மீண்டும் மோடிக்கு எதிராக தகுதியானவர் யாருமில்லை என்றே கூறியுள்ளார்.அவரது பேட்டியை கண்டித்தும், காங்., தலைமைக்கு தகுதியில்லை எனக்கூறிய அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும். மாவட்டத்தில் ஒற்றுமையாக இருந்த கட்சியில் கோஷ்டியை உருவாக்கியது கண்டிக்கத்தக்கது என பேசினர்.
உண்ணாவிரதம்:
பொருளாளர் பழனியப்பன், “காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிரதமராக ஒவ்வொரு தொண்டர்களும் வேலை செய்கின்றனர். ஆனால் கார்த்தியோ, பிரதமர் மோடிக்கு நிகர் யாருமில்லை என கூறியுள்ளார். அவரை கட்சியை விட்டு நீக்காவிட்டால் மாவட்டம் முழுதும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்,” என்றார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago