மேலும் செய்திகள்
கோடை விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள்
22-Jun-2025
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்றி பலரும் விற்பனை செய்து வருவதால் சாகுபடி பரப்பளவு பெருமளவு குறைந்து வருகிறது.திருப்புவனத்தை சுற்றிலும் அல்லிநகரம், கலியாந்தூர், நயினார்பேட்டை, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் திருப்புவனம் வட்டாரத்தில் நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து விட்டது.திருப்புவனம் - நரிக்குடி சாலையை நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் பத்தரை மீட்டராக அகலப்படுத்தி புதிய சாலை அமைத்துள்ளது. அதே போல திருப்புவனத்தில் இருந்து கீழராங்கியம் வழியாக பழையனூர் வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.சாலை வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் விவசாய நிலங்களை வாங்கி பிளாட்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.விவசாய நிலங்கள் ஐந்தாண்டுகள் விவசாயம் செய்யாமல் தரிசாக இருந்தால் அதனை வீட்டு மனைகளாக மாற்றலாம் என விதி உள்ளது.நடைமுறையில் வருவாய்துறையினரை சரி செய்து விளை நிலங்களை பிளாட்களாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.திருப்புவனம் நகரில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் திருப்புவனம் நகருக்குள் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டடி மனைகளாக மாறும் விவசாய நிலம்
இவர்களை குறிவைத்து ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். இதனால் வைகை ஆறு பாயும் திருப்புவனம் வட்டாரத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.அல்லிநகரம், வெள்ளக்கரை, நயினார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வெற்றிலை, கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. திருப்புவனத்தில் இருந்து நயினார்பேட்டை, வெள்ளக்கரை, அல்லிநகரம், கீழராங்கியம், வயல்சேரி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் ரோட்டை ஒட்டிய நிலங்கள் பிளாட்களாக மாறி வருகின்றன.மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் திருப்புவனம் தாலுகாவில் விவசாயம் கேள்விக்குறியாக மாறி விடும்.
22-Jun-2025