உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சாயும் டிரான்ஸ்பார்மரால் ஆபத்து

 சாயும் டிரான்ஸ்பார்மரால் ஆபத்து

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் அரசு பள்ளி முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மழை காலங்களில் மண்ணில் சிறிது சிறிதாக புதைந்து சாய்ந்து வருவதால் மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர். லாடனேந்தலில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் 13 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி மின் விநியோகத்திற்காக நுழைவு வாயில் அருகே பல ஆண்டுகளுக்கு முன் டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் டிரான்ஸ்பார்மர் சிறிது சிறிதாக மண்ணிற்குள் சாய்ந்து வருகிறது. டிரான்ஸ்பார்மரை கடந்து தான் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் சென்று வர வேண்டும். மின்வாரியம் டிரான்ஸ்பார்மர் கம்பத்தை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை