உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாரம்பரிய மஞ்சுவிரட்டு கிராமங்களை பட்டியலிட முடிவு

பாரம்பரிய மஞ்சுவிரட்டு கிராமங்களை பட்டியலிட முடிவு

திருப்புத்துார், : திருப்புத்துாரில் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் மஞ்சுவிரட்டை பாரம்பரியமாக நடத்தி வரும் கிராமங்களின் பட்டியலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு மக்கள் மன்றம் ராஜ்குமார் தலைமை வகித்தார். வேங்கைப்பட்டி முருகேசன் முன்னிலை வகித்தார். தலைவர் ஆறுமுகம் சேதுராமன் வரவேற்றார். செயலாளர் நவநீதன், துணைச் செயலாளர் வாஞ்சிநாதன், பொருளாளர் போஸ் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மஞ்சுவிரட்டு ஆர்வலர்களின் ஆலோசனைகளுக்கு பின்னர் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தும் கிராமங்களை பட்டியலிடவும், ஏதோ காரணத்தால் மஞ்சுவிரட்டு நின்று போன கிராமங்களில் மீண்டும் நடத்தவும், கிராமங்கள் தோறும் அமைப்பிற்கான உறுப்பினர்களை சேர்க்கவும், பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டை மீட்டெடுத்தல், பழமையான கிராமங்களில் ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தப்பட்ட மஞ்சுவிரட்டை மீண்டும் முன்னெடுத்து நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ