உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சபரிமலைக்கு மாலை அணிந்து  விரதத்தை துவக்கிய பக்தர்கள்

 சபரிமலைக்கு மாலை அணிந்து  விரதத்தை துவக்கிய பக்தர்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து விநாயகர், சிவன், அம்மன் கோயில்களில் நேற்று மாலை அணிந்து ஐயப்பனுக்கு பக்தர்கள் விரதத்தை துவக்கியுள்ளனர். கார்த்திகையில் மாலை போட்டு, மார்கழியில் பூஜை செய்து, தை மாதம் ஓடி காண வந்தோம் ஐயப்பா என்ற பாடல் வரியை தத்துவமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து, விரதமிருந்து, மண்டல பூஜை நடத்தியும், ஐயப்பன் கோயில்களில் திருவிழா நடத்தி சபரிமலைக்கு பயணத்தை துவக்குவர். நேற்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மாவட்ட அளவில் உள்ள அனைத்து விநாயகர், சிவன், ஐயப்பன், அம்மன் கோயில்களில் தங்களது குருநாதர் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் பாசிமலை மாலை அணிந்து, விரதத்தை துவக்கி யுள்ளனர். இதில் புதிதாக மாலை அணிந்த பக்தர்கள் கன்னிசாமி என அழைக்கப்படுவர். அவர்கள் கருப்பு நிறத்திலான ஆடை தான் அணிவார்கள். பல ஆண்டு சபரிமலை சென்று வந்த பக்தர்கள் குருநாதர், மூத்த சாமி என்ற கணக்கில் நீல நிற ஆடைகளை அணிந்து விரதத்தை கடைபிடிப்பார்கள். விரத காலங்களில் பக்தர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் அனைத்து பக்தர்களும் சென்று பஜனை பாடல்களை பாடி மண்டல பூஜை நடத்துவர். ஐயப்பன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், மண்டல அபிேஷகம் போன்ற பூஜைகள் செய்து ஐயப்பனை வழி படுவார்கள். இதன் மூலம் அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் தினமும் காலை ஐயப்பன் சரணகோஷம் காதிலும் இனிமையாக ஒலிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை