உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடு, மாடு வைத்து டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் மோசடி

ஆடு, மாடு வைத்து டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் மோசடி

சிங்கம்புணரி:வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் ஆடு, மாடு, சேவல்களை வைத்து குலுக்கல் முறையில் நவீன சூதாட்டம் நடக்கிறது.சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் ஆடு, மாடு, கோழிகளை வைத்து குலுக்கல் சூதாட்டம் நடக்கிறது. தென் மாவட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டை சேவல்கள் வளர்ப்பதை விரும்புவர். அவர்களை ஒரு கும்பல் வாட்ஸ் ஆப் மூலம் இணைத்து சூதாட்டத்தை நடத்துகிறது.குறிப்பிட்ட பெயரில் குழு துவங்கி அதில் தினமும் பல்வேறு குலுக்கல் முறை சூதாட்டங்களை நடத்தி வருகின்றனர். உதாரணமாக ரூ.5000 மதிப்புள்ள ஜல்லிக்கட்டு கன்றுக்குட்டியை ரூ.15 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்கின்றனர். குழுவில் உள்ளவர்கள் தலா ரூ.500 கொடுத்து எண் குறிப்பிட்ட டோக்கனை பெறுகின்றனர். இப்படி 30 பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் வேண்டும் வரிசை எண்ணை கொடுக்கின்றனர். அனைத்து எண்களும் விற்றுத்தீர்ந்த பிறகு ஆன்லைனில் நேரடி காட்சி மூலம் குலுக்கல் நடக்கிறது. அதில் ஒருவருக்கு பரிசு விழுகிறது. அவரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவைத்து கன்றுக்குட்டி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு கட்டிய பணத்தை திரும்பத்தருவதில்லை. இதனால் குலுக்கலில் தேர்வு செய்யப்படாதவர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆனாலும் அதிர்ஷ்ட ஆசையில் இந்த குலுக்கலில் சேர்ந்து பணத்தை இழக்கிறார்கள். இதே போல் சண்டை சேவல், ஜல்லிக்கட்டு காளை அலங்கார சலங்கை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தினசரி மோசடியான முறையில் அதிக விலை வைத்து குலுக்கல் நடக்கிறது. இதுபோன்ற சூதாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி