உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் பாதுகாப்பின்றி மனுதாக்கல் துவக்கம்: விதி மீறல்கள் தாராளம் ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்

போலீஸ் பாதுகாப்பின்றி மனுதாக்கல் துவக்கம்: விதி மீறல்கள் தாராளம் ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் மனுதாக்கல் போலீஸ் பாதுகாப்பின்றி விறுவிறுப்பாக துவங்கியது. அலுவலகத்திற்குள் வாகனங்கள் வருவது குறித்த விதி மீறல்கள் தாராளமாக இருந்தது. ராமநாதபுரம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளில் சுயேட்சைகள் மனுக்களை வாங்கி சென்றனர். நாள் நட்சத்திரம் பார்த்து மனுதாக்கல் செய்ய உள்ளனர். மேலும் பலருக்கு மனுவில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து தெரியவில்லை. இந்நிலையில் மனுவை வாங்கி வக்கீல்கள் மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர். முதல் நாள் என்பதால் ராமநாதபுரம் நகராட்சியில் மனுக்கள் மட்டுமே விறுவிறுப்பாக விற்பனையாகின. மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை. மனுதாக்கல் செய்யும் அலுவலகத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால்தான் தனியார் வாகனங்கள் நிறுத்த வேண்டும். ஆனால் இதுபோன்ற விதிகள் நேற்று கடைபிடிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி