மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
23-Aug-2025
திருப்புத்துார்: கண்டரமாணிக்கம் சேதுஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி கள் மாவட்ட கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர். மாவட்ட அணிக்கு 10 மாணவிகள் தேர்வாகினர். சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடந்தன. 22 பள்ளிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சேதுஐராணி பள்ளி மாணவிகள் அணி வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு ரூ.54 ஆயிரம் ரொக்கப் பரிசும், சான்றித ழும் வழங்கப்பட்டது. பள்ளியின் 10 மாணவிகள் மாவட்ட கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவிலான போட்டியில் விளையாட அவர்கள் தகுதி பெற்றனர். தாளாளர் டாக்டர் சேதுகுமணன், பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
23-Aug-2025