உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊராட்சி ஒன்றிய பெண் உதவி பொறியாளரை சேரால் தாக்க முயன்ற தி.மு.க., நிர்வாகி :பணிகளை புறக்கணித்து அலுவலர்கள் போராட்டம்

ஊராட்சி ஒன்றிய பெண் உதவி பொறியாளரை சேரால் தாக்க முயன்ற தி.மு.க., நிர்வாகி :பணிகளை புறக்கணித்து அலுவலர்கள் போராட்டம்

சிவகங்கை:சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் விடப்படாத பணிக்கு ரூ.7 லட்சத்துக்குரிய பில்லை அனுமதிக்க மறுத்த பெண் உதவி பொறியாளர் கிருஷ்ணகுமாரியை 52, இரும்பு சேரால் தாக்க முற்பட்ட தி.மு.க., மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முருகனை கைது செய்யக்கோரி அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் உதவி பொறியாளராக கிருஷ்ணகுமாரி 52, பணிபுரிகிறார். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது நேற்று மதியம் 2:00 மணிக்கு தி.மு.க., மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கோவானுார் முருகன் 48, (கோவானுார் ஊராட்சி தலைவர் ேஹமலதா கணவர்) வந்தார். பெருங்குடி ஊராட்சியில் இரண்டு மடைகளை சீரமைத்துள்ளேன். அதற்குரிய ரூ.7 லட்சம் பில்லை அனுமதிக்கும்படி உதவி பொறியாளரிடம் அவர் கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற முருகன் அங்கிருந்த இரும்பு சேரை துாக்கி உதவி பொறியாளரை தாக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் முருகனை தடுத்து அங்கிருந்து வெளியேற்றினர்.முருகனை கைது செய்ய வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகன் தாக்க முயன்றது தொடர்பாக உதவி பொறியாளர் போலீசில் புகார் அளித்தார்.* டெண்டரே விடாத பணிக்கு பணமா :ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: ஊராட்சி ஒன்றியத்தில் எந்த பணியையும் செய்ய முருகன் ஒப்பந்ததாரர் இல்லை. மேலும் டெண்டரே விடாத பணியை செய்ததாகவும் அதற்கு பில் தருமாறும் கேட்டு உதவி பொறியாளரை மிரட்டுகிறார். ஒப்பந்ததாரராக இல்லாத அவர் எப்படி பணியை மேற்கொண்டார். அவர் எப்படி பில் தொகையை கேட்கலாம் என்றனர்.* அவமதிப்பு செய்த உதவி பொறியாளர்:முருகன் கூறியதாவது: பெருங்குடி ஊராட்சியில் ஒப்பந்ததாரர் ராஜூ பெயரில் கடந்தாண்டு எடுத்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளில் 4 பணிகளை நான் செய்துள்ளேன். முதற்கட்டமாக கண்மாயில் இரண்டு மடைகளை கட்டியதற்காக ரூ.7 லட்சம் பில் தொகை கேட்டுத்தான் சென்றேன். உதவி பொறியாளர் தான் என்னை தரக்குறைவாக பேசினார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை