உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் அதிகரிக்கும் போலி லாட்டரி சீட்டுக்கள்; ஏமாறும் பொதுமக்கள்

இளையான்குடியில் அதிகரிக்கும் போலி லாட்டரி சீட்டுக்கள்; ஏமாறும் பொதுமக்கள்

இளையான்குடி : இளையான்குடி பகுதியில் அதிகளவில் வெளி மாநில போலி லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏராளமான மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதித்த பின்னர் ஏராளமான லாட்டரி வியாபாரிகள் வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு அதனை லாட்டரி சீட்டுகள் வாங்குபவர்களிடம் கொடுத்துவிட்டு ஆன்லைனில் ரிசல்ட் பார்த்து ஒரு சிலருக்கு மட்டும் குறிப்பிட்ட பணம் பரிசு விழுந்ததாக கூறி முதலில் பணத்தை கொடுக்கின்றனர்.லாட்டரி சீட்டுக்கள் வாங்குபவர்கள் இதனை நம்பி தொடர்ந்து அவர்களிடம் லாட்டரி சீட்டுகள் வாங்கும் போது அவர்களுக்கு பரிசுகள் விழுவது கிடையாது.இருந்தாலும் தொடர்ந்து பணம் பரிசாக விழும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் இதுபோன்ற போலி லாட்டரி சீட்டுகளை வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர்.குறிப்பாக இளையான்குடி பகுதியில் ஏராளமானோர் இதுபோன்ற போலி லாட்டரி சீட்டுகளை அதிகளவில் விற்று வருகின்றனர்.இதனை இப்பகுதியில் உள்ள சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர்.போலீசாரும் அவ்வப்போது ரோந்து சென்று போலி லாட்டரி சீட்டுகளை விற்பவர்களை கைது செய்தாலும் புதிது, புதிதாக லாட்டரி சீட்டு விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை