உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருக்கோஷ்டியூரில் விவசாயி கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை

 திருக்கோஷ்டியூரில் விவசாயி கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே பொன்னாங்குடியில் விவசாயி ராமனை 70, கொலை செய்த வழக்கில் சின்னையா 81, கூத்தலுார் கருப்பையா 40 ஆகியோருக்கு -ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருக்கோஷ்டியூர் விவசாயி ராமன் 70. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னையா 81, இடையே இடப்பிரச்னை இருந்துள்ளது. 2018 ம் ஆண்டு ஏப்., 30 ம் தேதி காலை 11:00 மணிக்கு ராமன் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அன்று மதியம் 1:00 மணிக்கு விருசுழி ஆற்றின் அருகே வயலில் ராமன் இறந்து கிடந்தார். திருக்கோஷ்டியூர் போலீசில் ராமனின் மனைவி நாச்சம்மை புகார் செய்தார். ராமனை கொலை செய்ததாக பொன்னாங்குடி சின்னையா 81, கூத்தலுார் கருப்பையா 40 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்தவழக்கு விசாரணை சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்தசாரதி முன் நடந்தது. சின்னையா, கருப்பையா இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 1,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ