காரைக்குடியில் தொடர் மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்
காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில், போதிய மழை இல்லாததால், விவசாயம் செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.சாக்கோட்டை பகுதியில் பெரும்பாலும் மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது.ஆண்டுதோறும் நெல் விதைப்பின் மூலம் விவசாய பணி மேற்கொள்ளும் விவசாயிகள், இவ்வாண்டு போதிய மழை பெய்யாததால் விவசாய பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால், நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் விவசாயிகள் விவசாயப் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்து விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.