உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழையால் விவசாய பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

மழையால் விவசாய பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

காரைக்குடி: கல்லல் மற்றும் சாக்கோட்டையில் தொடர் மழை காரணமாக விவசாயிகள் விவசாயப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.கல்லல் மற்றும் சாக்கோட்டை வட்டாரத்தில் 6 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கண்மாய் மற்றும் போர்வெல் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக கல்லல், காரைக்குடி, சாக்கோட்டை உட்பட மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் கண்மாய், குளங்களில் நீர் நிரம்பியுள்ளது. விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.என்.ஆர்., மற்றும் டீலக்ஸ் ரக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். உழவு பணி முடித்து தற்போது நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில்: தற்போது தொடர் மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பி உள்ளது. வயல்களில் உழவு மற்றும் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இருக்கும் தண்ணீரை வைத்து விவசாய பணியை துவக்கியுள்ளோம். தொடர் மழை பெய்தால் விவசாயம் தப்பிக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ