உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி அரசு பள்ளிகளில் காம்பவுண்ட் சுவரின்றி அச்சம்

காரைக்குடி அரசு பள்ளிகளில் காம்பவுண்ட் சுவரின்றி அச்சம்

காரைக்குடி : மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. -சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காம்பவுண்ட் சுவர் கட்டவில்லை. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர்கள் புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் குன்றக்குடி அருகே உள்ள சாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. பள்ளியின் பின்புறம் கருவேல மரங்கள், கண்மாய்கள் உள்ளதோடு, சூழ்ந்துள்ள கருவேல மரங்களால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் மாணவர்களுக்கு அபாயம் நிலவுகிறது. போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல், மாணவர்கள் பள்ளி நேரங்களில் வெளியில் சென்று ஆபத்தில் சிக்கும் நிகழ்ச்சிகள் குறித்து அன்றாடம் செய்திகள் வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடக்கப் பள்ளிகளில் முறையான காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி