உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடைக்காட்டூர் ஆலயத்தில் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி சிவகங்கை ஆயர் பங்கேற்பு

இடைக்காட்டூர் ஆலயத்தில் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி சிவகங்கை ஆயர் பங்கேற்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு முதல் வெள்ளி சிறப்பு திருப்பலியில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் மற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.இங்குள்ள சர்ச்சில் மாதந்தோறும் நடைபெறும் முதல் வெள்ளி,ஆண்டு விழா,தேர் பவனி, புனித வெள்ளி,கிறிஸ்துமஸ்,ஆங்கில புத்தாண்டு நாட்களில் நடக்கும் சிறப்பு திருப்பலியில் தமிழகம் முழுவதிலுமிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை நடத்துவர்.ஆங்கில புத்தாண்டு முதல் வெள்ளியான நேற்று நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் புதிதாக பதவியேற்ற சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் சிறப்பு திருப்பலியை நடத்தினார்.இதில் இடைக்காட்டூர் சர்ச் திருத்தலப் பணியாளர் இம்மானுவேல் தாசன், மானாமதுரை,மற்றும் அருளானந்தபுரம், சவேரியார் பட்டணம், காளையார் கோவில், சருகனி, தேவகோட்டை உள்ளிட்ட சிவகங்கை மறை மாவட்ட சர்ச்களைச் சேர்ந்த பாதிரியார்கள் மற்றும் சிவகங்கை மதுரை ராமநாதபுரம் விருதுநகர் தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பாதிரியார் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை