மேலும் செய்திகள்
வஞ்சினிப்பட்டியில் மொகரம் பூக்குழி விழா
07-Jul-2025
கண்டவராயன்படடி: திருப்புத்தூர் பகுதியில் நீர்நிலைகளில் நீர் வற்றுவதை அடுத்து கண்மாய் பராமரிப்பு, மீன் இனவிருத்திக்காக கண்மாய் அழிப்பை கிராமத்தினர் நடத்துகின்றனர். அதை மீன்பிடி விழாவாக தற்போது கிராமத்தினர் கொண்டாடுகின்றனர். நேற்று வஞ்சினிப்பட்டி மடைக்கருப்பர் கோயில் கண்மாயில் இவ்வாறு திரளாக கிராமத்தினர் கூடி கண்மாயில் மீன்பிடித்தனர்.முன்னதாக கிராமத்தினர் மடைக்கருப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்திருந்த சுத்துப்பட்டுக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமத்தினர் ஒரே நேரத்தில் மீன்பிடிக்க கண்மாயில் இறங்கினர். கையில் கிடைத்த மீன் பிடி உபகரணங்களுடன் கண்மாயில் சகதியுடன் கிடந்த குறைவான நீரில் அலசி மீன்பிடித்தனர். கிடைத்த சிலேபி, குரவை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்களுடன் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினர்.
07-Jul-2025