உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆன்லைன் முதலீடு என ரூ.14.41 லட்சம் மோசடி

ஆன்லைன் முதலீடு என ரூ.14.41 லட்சம் மோசடி

சிவகங்கை:ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக்கூறி மானாமதுரை வாலிபரிடம் ரூ.14.41 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். மானாமதுரையை சேர்ந்த 37 வயது நபர் , அலைபேசிக்கு வந்த லிங்கில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் பார்த்துள்ளனர். அதை கிளிக் செய்ததும், அவரது அலைபேசிக்கு டெலிகிராமில் ஒருவர் பேசியுள்ளார். ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெற்றுத்தருவதாக உறுதி கூறியுள்ளார். இதை நம்பிய மானாமதுரை நபர் அவர் கூறிய 11 வங்கி கணக்கில் 20 பரிவர்த்தனைகளில் ரூ.14.41 லட்சம் வரை அனுப்பியுள்ளார். பணத்தைபெற்ற நபர் லாப தொகையை தராமல் மோசடி செய்தார். இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ