உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் அடிக்கடி மின்தடை

இளையான்குடியில் அடிக்கடி மின்தடை

இளையான்குடி: இளையான்குடியில் சில நாட்களாக அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது ரமலான் மாதம் என்பதால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தினம்தோறும் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள் கூறியதாவது: இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் தினமும் தொழுகை நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின்தடை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ள நிலையில் சில நாட்களாக தொழுகை நேரத்திலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மிகுந்த கவலையில் உள்ளோம். மின்தடையால் குடிநீர்வினியோகம் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை