உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரத்தில் பவுர்ணமி பூஜை ரத்து

மடப்புரத்தில் பவுர்ணமி பூஜை ரத்து

திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற உள்ள பவுர்ணமி பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. செப். 7ம் தேதி இரவு 9:57 மணிக்கு சந்திரகிரகணம் தொடங்கி நள்ளிரவு 1:26 மணி வரை நீடிக்கிறது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மதியம் 1:00 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறுவதால், பூஜை நடந்த பின் மதியம் 1:30 மணிக்கு நடை சாத்தப்படும். ஞாயிறு அன்று மாலை நடைபெற உள்ள அபிஷேகம், பவுர்ணமி பூஜை ரத்து செய்யப்படுகிறது. எனவே பக்தர்கள் ஞாயிறு அன்று நடை சாத்தப்படுவதால் எந்த வித பூஜையும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு நாள் 8ம் தேதி திங்கட்கிழமை வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை