உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

சிவகங்கை : சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மன்னர் சண்முகராஜா நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடந்த ஓவியப்போட்டியிலும், இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மன்னர் கல்வி நிறுவனங்களின் முகமைக் குழு நிரந்தர தலைவர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். பள்ளி குழு தலைவர் மகேஷ்துரை முன்னிலை வகித்தார். மன்னர் கல்வி நிறு வனங்களின் செயலர் குமரகுரு வரவேற்றார். மாவட்ட அரசு வழக்கறிஞர் சிவக்குமார், ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் கென்னடி, இந்தியன் வங்கி முன்மை மேலாளர் துரைமுகில், கலைச்செல்வி ராமகிருஷ்ணன் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை