உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்

திருப்புவனம் : அரசு பஸ்கள் பாதி வழியில் பழுதாகி நிற்பது தொடர்கதையாகி வருவதால் அதில் பயணம் செய்ய பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக கமுதி, ராமநாதபுரம், ராமேஸ் வரம் உள்ளிட்ட ஏராளமான நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் அரசு பஸ்களில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். அதே போல மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பலரும் சீசன் டிக்கெட் எடுத்து வைத்து கொண்டு அரசு பஸ்களில் பயணம் செய்து வரு கின்றனர். மதுரை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கும்பகோணம் கோட்ட பஸ்கள் இப்பாதையில் அதிகளவு இயக்கப்படுகின்றன. பச்சை நிற அரசு பஸ்கள் ஏராளமாக இயங்கி கொண்டிருந்த நிலையில் அதற்கு மாற்றாக மஞ்சள் மற்றும் நீல நிற பஸ்கள் சமீப காலமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த புத்தம் புதிய பஸ்கள் பலவும் தினசரி பழுதடைந்து நிற்பதும் பாதி வழியில் பயணிகள் அடுத்தடுத்து வரும் பஸ்களுக்கு காத்து நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது. பாதி வழியில் பழுதடைந்து நிற்பதால் அரசு பஸ்களை நம்பி சரியான நேரத்திற்கு எங்குமே செல்ல முடியவில்லை. திருப்புவனத்தில் சிவகங்கை ரோடு, செல்லப்பனேந்தல் விலக்கு, வில்லியரேந்தல் என தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களில் மூன்று அரசு பஸ்கள் பழு தாகியதால் பயணிகள் வேறு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமைகள், கைக் குழந்தைகளுடன் வரு பவர்கள் என பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பாதி வழியில் பஸ்கள் பழுதாகி நிற்பதால் டிரைவர், கண்டக்டருடன் பயணிகள் தகராறு செய்கின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும். அரசு பஸ்கள் பழுதாகி பாதி வழியில் நின்று விடுவதால் தனியார் பஸ் களையே பயணிகள் விரும்புகின்றனர். இதனால் அரசு பஸ்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை