உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அமைச்சர் தொகுதியை புறக்கணிக்கும் அரசு டவுன் பஸ் கிராமப்புற மாணவர்கள் அவதி

 அமைச்சர் தொகுதியை புறக்கணிக்கும் அரசு டவுன் பஸ் கிராமப்புற மாணவர்கள் அவதி

சிங்கம்புணரி: சிங்கம்புணரிக்கு வரும் அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டு வேறு ஊர்களுக்கு இயக்கப்படுவதால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பஸ் டெப்போவில் இருந்து சிங்கம்புணரிக்கு 2 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் ஒரு பஸ் நத்தத்தில் இருந்தும் மற்றொரு பஸ் சிங்கம்புணரியில் இருந்தும் புறப்படும் வகையில் கால அட்டவணை உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி, மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டி, வெள்ளினிப்பட்டி, மனப்பச்சேரி, கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் பகுதி மாணவர்கள் சிங்கம்புணரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இப்பேருந்துகளில் தான் வந்து செல்கின்றனர். சில வருடங்களாக குறிப்பாக மகளிர் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பிறகு இப்பேருந்துகள் சிங்கம்புணரிக்கு சரிவர இயக்கப்படுவதில்லை. குறிப்பாக மாணவர்கள் பள்ளிக்கு வரும் மற்றும் வீடு திரும்பும் நேரங்களில் ஒரு பஸ் கூட இயக்கப்படுவதில்லை. மதியம், இரவில் ஒரே நேரத்தில் நான்கு பேருந்துகள் வரை அடுத்தடுத்து வந்து சென்று விடுகின்றன. மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிகளுக்கு வர முடியாமலும், வீடு திரும்ப முடியாமலும் சிரமப்படுவதுடன் டூ வீலர்களில் லிப்ட் கேட்டு சென்று விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அமைச்சர் பெரிய கருப்பனின் தொகுதிக்குட்பட்ட சிங்கம்புணரியை நத்தம் டெப்போ அலுவலர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனர் என்று பயணிகள் புலம்பி வருகின்றனர். நத்தம் டெப்போ அதிகாரியிடம் கேட்டபோது, ஏற்கனவே புகார்கள் வந்த போது நடவடிக்கை எடுத்தோம், தற்போது என்ன நடக்கிறது என்று விசாரித்து முறையாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்போம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி