உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராம சபை கூட்டங்கள்: அறிவிக்க தயங்கும் அதிகாரிகள்

கிராம சபை கூட்டங்கள்: அறிவிக்க தயங்கும் அதிகாரிகள்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது குறித்து மக்களுக்கு எந்த வித அறிவிப்பும் செய்யப்படுவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு, செலவீனங்கள், அரசின் திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அந்தந்த கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்படும்.இதற்காக வழக்கமாக கூட்டப்படும் கிராம சபை கூட்டங்களை விட உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் கூட்டப்படும் கிராம சபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்கிராம சபை கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியம், அரசின் இலவச நலத்திட்டங்கள், ரேஷன்கார்டு உள்ளிட்டவை கேட்டு மக்களிடம் விண்ணப்பம் வாங்குவதும் உண்டு.மேலும் அந்தந்த ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த வரவு செலவும் வாசிக்கப்படும், இதில் தவறு இருந்தால் பொதுமக்களின் ஆட்சேபணை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கும்.கிராம சபை கூட்டம் நடப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும் வகையில் நோட்டீஸ், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்ய வேண்டும், மற்ற மாவட்டங்களில் முறையாக பின்பற்றப்படும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இதுவரை கிராம சபை கூட்டங்கள் குறித்து அறிவிப்பது இல்லை.விளம்பரப்படுத்துவதும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. கிராம சபை கூட்டங்களுக்கு பெரும்பான்மையானவர்கள் வருவது இல்லை.பெயரளவில் கூட்டம் நடத்தப்பட்டு கிராமமக்களிடம் கையெழுத்து வாங்கி விடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வரும் காலங்களில் கிராம சபை கூட்டங்கள் குறித்து அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஊராட்சிகளில் நாளைகிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (மே 1) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் ஆஷா அஜித் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் நாளை காலை 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.அக்கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் ஊராட்சி பொதுநிதி, செலவினம், மனைப்பிரிவு, கட்டட அனுமதி, வரி இனங்கள் குறித்து விவாதிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை