காரைக்குடியில் பசுமை திட்டம் 2000 மரக்கன்று நட முடிவு
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில், பசுமை திட்டத்தின் கீழ் நகர் முழுவதும் செடிகள் மரங்கள் நடும் தொடக்க விழா நேற்று நடந்தது. காரைக்குடி மாநகராட்சியில், நகரை பசுமையாக்கும் திட்ட துவக்க விழா நடந்தது. மாநகராட்சி மேயர் முத்துத்துரை தலைமை வகித்தார். கமிஷனர் சங்கரன், துணை மேயர் குணசேகரன், மாநகர நல அலுவலர் வினோத் பங்கேற்றனர். காரைக்குடி பஸ் ஸ்டாண்ட், சூடாமணி புரம், கழனிவாசல் போன்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டனர். நகரில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளனர்.