உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரத்தால் மறைந்த வழிகாட்டி போர்டு

மரத்தால் மறைந்த வழிகாட்டி போர்டு

காரைக்குடி காரைக்குடியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டு மறைந்திருப்பதால் பயணிகள் சிரமப்படும் நிலை உள்ளது.சுற்றுலாத்தலமான காரைக்குடிக்கு தினமும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கானாடுகாத்தான் ஆத்தங்குடி அரியக்குடி இலுப்பைகுடி பள்ளத்தூர் கண்டனூர் உட்பட பல பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் வழிகாட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளன.இதில் அரியக்குடி ரயில்வே கேட் அருகே இலுப்பக்குடி செல்லும் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த போர்டை அருகில் வளர்ந்துள்ள மரங்கள் மறைத்துள்ளது. தென்திருப்பதியான அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில், இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மறைந்திருக்கும் இந் போர்டால் பயணிகள் குழப்பமடையலாம். எனவே இந்த மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை