உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தண்ணீர் சூழ்ந்த மாணவர் விடுதி அதிர்ச்சியடைந்த ஆய்வுக்குழு

தண்ணீர் சூழ்ந்த மாணவர் விடுதி அதிர்ச்சியடைந்த ஆய்வுக்குழு

காரைக்குடி: காரைக்குடியில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வின் போது, விடுதியை சுற்றிலும் மழை நீர் தேங்கி நின்றதால் அதிர்ச்சி அடைந்தனர். காரைக்குடி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தமிழ்நாடு சட்டமன்ற அரசு மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையில் ஆய்வு நடந்தது. காரைக்குடி பருப்பூரணியில் உள்ள கல்லுாரி மாணவர் சமூக நீதி விடுதியில் ஆய்வு நடந்தது. இதில், கலெக்டர் பொற்கொடி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, சேவூர் ராமச்சந்திரன், பாலாஜி, கருமாணிக்கம், வெங்கடேஸ்வரன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விடுதியில் நுழைந்த போது விடுதியை சுற்றிலும் மழை நீர் தேங்கி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆய்வு குழுவினருக்காக ஜல்லிகற்கள் கொட்டி நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது. புதிய கட்டடம் கட்டி ஓராண்டை கடந்தும் தண்ணீர் தேங்கி கிடந்ததால், குழுவினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் தேங்கி கிடப்பதை தடுக்கும் பொருட்டு பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை