உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ: 349 பேர் கைது

சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ: 349 பேர் கைது

சிவகங்கை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ சார்பில் மறியலில் ஈடுபட்ட 349 பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருதல், முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு விடுவித்தல், உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல், அரசு ஊழியர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசலில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடத்தினர். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், மகேஷ்வரன், முத்துப்பாண்டியன், நாகராஜன், ராம்குமார் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் மறியலை துவக்கி வைத்தார்.மறியலில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளான 119 பெண்கள் உட்பட 349 பேரை சிவகங்கை டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்டோர் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை