உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ‛கோமா நிலையில் காளையார்கோவில் தாலுகா அரசு மருத்துவமனை: டாக்டர், நர்சுகள், ஊழியர், வசதி பற்றாக்குறை

‛கோமா நிலையில் காளையார்கோவில் தாலுகா அரசு மருத்துவமனை: டாக்டர், நர்சுகள், ஊழியர், வசதி பற்றாக்குறை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் 1940 ம் ஆண்டில் கட்டிய கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டது. அதே கட்டடத்தில் தான் பல ஆண்டாக அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் தான் தாலுகா தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தினர். காளையார்கோவில், மறவமங்கலம், புலியடிதம்பம், அரண்மனைசிறுவயல் உட்பட சுற்றுப்புறத்தில் உள்ள 125 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.தினமும் வெளிநோயாளி 400 பேர், உள்நோயாளிகள் 40 பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இம்மருத்துவமனை மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்ததால், அவசர கால விபத்து சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.

30 பணியிடத்திற்கு 20 காலியிடம்

நிலைய மருத்துவ அலுவலரின் கீழ் 6 உதவி டாக்டர்கள், செவிலியர் கண்காணிப்பாளர் 1, நர்சுகள் 7 பேர், மருந்தாளுநர்கள் 2 பேர், சித்தா, ஓமியோபதி, பல் டாக்டர்கள் இருக்க வேண்டும். இது தவிர நுண்கதிர் வீச்சாளர், டிரைவர், லேப் டெக்னீசியன், பல்நோக்கு பணியாளர்கள் 8, சமையலர் ஒருவர் என 30 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், நிலைய மருத்துவ அலுவலர், உதவி மருத்துவர் 5, செவிலிய கண்காணிப்பாளர், பல்நோக்கு பணியாளர் 8 பேர் என இங்கு காலிபணியிடம் மட்டுமே 20 வரை உள்ளன.தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்தில் காயம் அடைவோர், அடிதடி வழக்கில் காயத்துடன் தினமும் 30 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்குள்ள அவசரகால விபத்து காய சிகிச்சை பிரிவு ஏ.சி., அறை, போதிய வெண்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளின்றி, தகர கொட்டகையில் இயங்குவது தான் நோயாளிகளுக்கு வேதனை அளிக்கிறது.குறிப்பாக இங்குள்ள ஆப்பரேஷன் தியேட்டரில் போதிய மின் விளக்கு வசதி, ஆப்பரேஷனின் போது ரத்த கசிவு ஏற்படுவதை தடுக்கும் டயாதெர்பி' மிஷின் இல்லை. டாக்டர்கள் சிரமத்திற்கு இடையே ஆப்பரேஷன் செய்கின்றனர். அறுவை சிகிச்சை நிபுணரின்றி காரைக்குடியில் இருந்து ஒரு டாக்டரை அவ்வப்போது அழைத்து தான் ஆப்பரேஷன் செய்கின்றனர். இப்பகுதியில் நடக்கும் விபத்தில் மாதத்திற்கு 5 பேர் வரை உயிரிழக்கின்றனர்.அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்ய, குளிரூட்டப்பட்ட பிரேத பரிசோதனை அறையில்லை. பல ஒரே கட்டடத்தில் இம்மருத்துவமனை இயங்குவதால், நோயாளிகள், ஊழியர்களுக்கு பாதுகாப்பின்றி இயங்குகிறது. இவற்றை அகற்றிவிட்டு, தாலுகா தலைமை மருத்துவமனைக்கு உரிய வசதியுடன் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என அரசுக்கு இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். தொகுதி எம்.பி., கார்த்தி, எம்.எல்.ஏ., செந்தில்நாதன் ஆகியோர் தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி