உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி, கல்லலில் கொட்டி தீர்த்த மழை

காரைக்குடி, கல்லலில் கொட்டி தீர்த்த மழை

காரைக்குடி: காரைக்குடி, கல்லல் உட்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தது.அவ்வப்போது, மாலை நேரங்களில் மேக கூட்டங்கள் கூடினாலும் மழை பொய்த்துப் போனது. இந்நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரைக்குடி மானகிரி தளக்காவூர் கல்லல் உட்பட பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழையால், பழைய பஸ் ஸ்டாண்ட், மானகிரி உட்பட பல இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ