உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பிரான்மலை உச்சியில் இன்று கார்த்திகை தீபம்

 பிரான்மலை உச்சியில் இன்று கார்த்திகை தீபம்

சிங்கம்புணரி: பிரான்மலை உச்சியில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு துவங்கியுள்ளது. திருக்கொடுங்குன்றம் என்ற பிரான்மலை 2500 அடி உயரமுடையது. இம்மலை உச்சியில் திருக்கார்த்திகையையொட்டி இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 165 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டரை அடி உயர கொப்பரை சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு இன்று மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. காலை 9:00 மணிக்கு அடிவாரத்தில் உள்ள திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதாம்பிகை கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பாரம்பரிய முறைப்படி தீபத்திற்கான திரி அனுப்பி வைக்கப்பட உள்ளது. விழாக் குழுவினர் பக்தர்கள் மலையேறி கார்த்திகை தீபம் ஏற்றுகின்றனர். இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை