உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விதவிதமான மாடல்களில் கார்த்திகை விளக்கு விற்பனை

 விதவிதமான மாடல்களில் கார்த்திகை விளக்கு விற்பனை

காரைக்குடி: காரைக்குடி நகரில் கார்த்திகை தீப விழாவையொட்டி, விதவிதமான புதுப்புது மாடல்களில் அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இன்று கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள். காரைக்குடி பகுதியில் அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. காரைக்குடி பூமாலை வணிக வளாகத்தில், வண்ண வண்ண நிறங்களில் யானை, விநாயகர் வடிவத்தில் 5 முகங்கள் கொண்ட விளக்குகள், விதவிமான பீங்கான் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மண்ணால் செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய ரக அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. ரூ 70 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. தவிர, மண்ணால் செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான அகல் விளக்குகளும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. வியாபாரிகள் கூறுகையில்: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு வழக்கமான மண் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தவிர பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் புதிய மாடல் அகல் விளக்குகள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழை காரணமாக விளக்குகள் உற்பத்தி மற்றும் வரத்து தாமதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை