| ADDED : நவ 18, 2025 04:12 AM
சிங்கம்புணரி: சிவபுரிபட்டி தர்மசம் வர்த்தினி, சுயம் பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ் வரருக்கு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. பிரான்மலை திருக் கொடுங்குன்றநாதர், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர், முறையூர் மீனாட்சி சொக்கநாதர், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. தேவகோட்டை: - தேவகோட்டை மீனாட்சி சுந்த ரேஸ்வரர் கோயிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுந்தரேஸ் வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் அபிஷேகம் நடந்தது. கலங்காது கண்ட விநாயகர் கோயிலில் ஐந்நூற்றீஸ்வரருக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. நித்திய கல்யாணி கைலாசநாதர், திருக்கயிலேஸ்வரர், ஆதிசங்கரர் கவுரி கைலாசநாதர், நயினார்வயல் அகத்தீஸ்வரர், வெளிமுத்நி பழம்பதி நாதர், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு சங்காபிஷேகம் நடந்தன.