உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பெண் தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி

 பெண் தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி

சிவகங்கை: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண் தொழில் முனைவோர் 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் உதவி பெறலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது: பயன் பெற விரும்பும் மகளிர் தமிழகத்தில் வசிக்கும் குடும்ப அடையாள அட்டை பெற்றவராக வும், 18 முதல் 55 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வி தகுதி தேவையில்லை. அதிக பட்சமாக ரூ.10 லட்சம் வரை திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான தயாரிப்புகள், ஊட்ட சத்து நிரம்பிய உணவு பொருட்கள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு முன் னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்க கடனுதவிகளும் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் அதிகாரமாக்கல் திட்டத் தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர்கள் www.msmeonline.tn.gov.inஎன்ற இணைதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையிலான குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். குறிப்பிட்ட திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை என்ற முக வரில் நேரிலோ அல்லது 04575 - -240 257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்