உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூரில் இன்று மஹோத்ஸவம் துவக்கம்: ஜன.27ல் திருக்கல்யாணம்

திருக்கோஷ்டியூரில் இன்று மஹோத்ஸவம் துவக்கம்: ஜன.27ல் திருக்கல்யாணம்

ஜன.27ல் திருக்கல்யாணம்திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் இன்று தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸம் இன்று துவங்குகிறது. ஜன.27ல் பெருமாள் -- --கோதை நாச்சியார் திருக்கல்யாணம் நடைபெறும்.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தை மாதம் பெருமாள் கோதை நாச்சியார் தைலக்காப்பு திருக்கல்யாண மகோத்ஸவம் 5 நாட்கள் நடைபெறும். இன்று மாலை 4:40 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் பெரிய சன்னதிக்கு எழுந்தருளுவார். இரவு 7:30 மணிக்கு பெரிய பெருமாளிடம் பிரியாவிடை திருப்பாவை வியாக்யானம் நடைபெறும். நாளை காலை 8:00 மணிக்கு ஆண்டாள் தலைக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், காலை 9:00 மணிக்கு தைலம் திருவீதி வலம் வருதலும், காலை 10:00 மணிக்கு தைலம் சாத்துதலும், காலை 11:00 மணிக்கு நவகலச அலங்கார ஸெளரித் திருமஞ்சனமும் நடைபெறும். இரவில் திருவீதி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் காலையில் ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், ஜன.27ல் மாலையில் பெருமாள், ஆண்டாள் ஊஞ்சலில் மாலை மாற்றுதலும், இரவில் திருக்கல்யாண மகோத்ஸவமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ