உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ரோட்டில் தேங்கும் மழைநீரால் அவதி

மானாமதுரை ரோட்டில் தேங்கும் மழைநீரால் அவதி

மானாமதுரை : மானாமதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சிவகங்கை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரிலேயே மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோடு மிகவும் குறுகலாக இருந்ததினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து விரிவாக்கம் செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மானாமதுரை சிப்காட் பகுதியில் இருந்து அண்ணாதுரை சிலை வரை சிவகங்கை ரோட்டில் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் ஓரளவிற்கு அகற்றப்பட்டு கழிவு நீர் வாய்க்கால் வசதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் இப்பகுதியில் சிறிய மழை பெய்தாலே நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரிலும், சி.எஸ்.ஐ., உயர்நிலைப்பள்ளி, காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோடு பள்ளமாக இருப்பதினால் மழை நீர் அதிகளவில் தேங்குவதன் மூலம் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் போடப்பட்ட ரோடு பள்ளமாக இருப்பதால், மழை நீர் தேங்குகிறது. ரோட்டோர கடைக்காரர்கள் மழை நீர் தெறிக்காமல் இருக்க, கடைக்கு முன் கற்களை அடுக்கி வைக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கற்களில் மோதி விபத்திற்குள்ளாகின்றனர். ரோட்டில் மழைநீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை