சிங்கம்புணரியில் மண்டல பூஜை
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது. சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஓம் சேவுகா ஐயப்பன் யாத்திரை குழுவினர் சார்பில் மண்டல பூஜை, கன்னி பூஜை நடத்தப்பட்டது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.குமணன் ராமு இசைக்குழுவினர் சார்பில் பக்தி கச்சேரி நடைபெற்றது. வேங்கைப்பட்டி ரோட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.