உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஞ்சுவிரட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி பெரியண்ணன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தாணிச்சாவூரணியில் கோயில் திருவிழாவையொட்டி மே 4 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி கால்நடைத்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி., தாசில்தாருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு: மனுவை அதிகாரிகள் 10 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி