உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரை கோயிலில் உண்டியல் கொள்ளை முகமூடி நபர் கைவரிசை

 மானாமதுரை கோயிலில் உண்டியல் கொள்ளை முகமூடி நபர் கைவரிசை

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முகமூடி அணிந்த நபர் வைகைகரை அய்யனார், சோனையா சுவாமி கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மானாமதுரை தாயமங்கலம் ரோடு அலங்கார குளம் அருகே வைகை கரை அய்யனார், சோனையா சுவாமி கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் இருந்த உண்டியலை நேற்று முன்தினம் இரவு துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர், துாக்கி சென்றார். கோயில் எதிர்புறம் வைத்து அதை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றார். நேற்று காலை கோயிலை திறக்க வந்த நிர்வாகிகள் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்படி போலீசார் இதில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி