தேவகோட்டையில் குறுவட்ட விளையாட்டு
தேவகோட்டை : தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடை பெறுகின்றன. இதில் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள 28 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை பாக்கியம் தலைமையில் போட்டிகள் நடந்தன. நகரத்தார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வெங்கடாசலம் முன்னிலையில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பிரைட், சஞ்சீவி ஞானசேகரன், முன்னாள் அலுவலர் காந்தி, பங்கேற்றனர்.