உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காணாமல் போன வரத்து கால்வாய்கள் ரோட்டில் வீணாக ஓடும் மழைநீர்

 காணாமல் போன வரத்து கால்வாய்கள் ரோட்டில் வீணாக ஓடும் மழைநீர்

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில், வரத்து கால்வாய்கள் மாயமானதால் மழை நீர் சாலையில் வீணாகி பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தின், பாரம்பரிய நகரமாக கருதப்படும் செட்டிநாடு பகுதி கட்டடங்களுக்கு மட்டுமின்றி நீர் மேலாண்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். நீண்ட அகலமான தெருக்கள், மழைநீர் செல்வதற்கு வடிகால், மழைநீரை சேமித்து வைக்க குளங்கள் தெப்பம், கண்மாய்கள் என நீர் மேலாண்மையில் சிறந்த காரைக்குடி பகுதி நாகரீகத்தின் அடையாளமாகவும் விளங்கியது. காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை நீரை குளங்களில் சேமித்து வைத்து குடித்து வரும் பழக்கம் இன்றளவும் தொன்று தொட்டு வருகிறது. ஆனால், காரைக்குடி மாநகராட்சியில் வரத்து கால்வாய், ஆறு, குளங்கள் என அத்தனையும் ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமாகி வருகிறது. இதன் விளைவு மழை நீரை சேமித்து வைக்க முடியாத போது சாலைகளில் ஓடி சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, பெரியார் சிலை, 100 அடி ரோடு, ரயில்வே ரோடு என வழி நெடுகிலும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து வீணாகி ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்ததோடு, மழைநீரும் வீணானது. சாலையும் குண்டும் குழியுமாகி விட்டது. மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்களை, மீட்டெடுத்து நீர் ஆதாரமான மழை நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி