விபத்தில் சிக்கியவருக்கு உதவிய எம்.எல்.ஏ.,
சிவகங்கை; சிவகங்கை சோழபுரத்தை சேர்ந்தவர் துரைசிங்கம் 45. இவர் நேற்று டூவீலரில் மானாமதுரை ரோட்டில் சென்றார். சாமியார்பட்டி அருகே சென்ற போது அங்கிருந்த தடுப்பில் மோதி விழுந்தார்.மானாமதுரையில் இருந்து சிவகங்கை வந்த எம்.எல்.ஏ., செந்தில்நாதன் வாகனத்தை நிறுத்தி காயம் அடைந்த துரைசிங்கத்துக்கு முதலுதவி அளித்து தன்னுடன் வந்த மற்றொரு வாகனத்தின் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.