| ADDED : நவ 16, 2025 01:57 AM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் புதுவயலில் குடும்பத்தகராறில் விஷம் குடித்ததுடன் குழந்தை களுக்கு கொடுத்த தாய், 10 வயது மகள் பலியாயினர். புதுவயல் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு அகிலேஷ் 12, ஷிவானி 10, யாழ்மொழி 4 ஆகிய குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. நவ., 10 தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டது. ராஜாமணி ஆட்டோவில் ராமேஸ்வரத்திற்கு சவாரி சென்று விட்டார். விரக்தியில் இருந்த சித்ரா மாலையில் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும், பூச்சி மருந்தை தானும் குடித்து விட்டு தனது மூத்த மகன் மற்றும் மூத்த மகளுக்கு கொடுத்தார். கடைசி மகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். விஷம் குடித்தது குறித்து தனது கணவருக்கு அலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த ராஜாமணி, உயிருக்கு போராடிய 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். சித்ரா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்று அவரது 10 வயது மகள் ஷிவானி இறந்தார். மகன் அகிலேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சி கிச்சை பெற்று வருகிறார். சித்ராவின் தாய் தனலட்சுமி புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.