தாய், மகளை மிரட்டி 10 பவுன் வழிப்பறி
சிவகங்கை:சிவகங்கை அருகே பையூர் சரஸ்வதி 62. இவரது மகள் மீனாள் 32. இவர்களது சொந்த ஊர் கோவானுார். இருவரும் நேற்று மதியம் 3:30 மணிக்கு டூவீலரில் சிவகங்கையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றனர். குண்டுமணி அம்மன் கோயில் அருகே அவர்களை வழிமறித்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி இருவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை வழிப்பறி செய்து தப்பினர். சிவகங்கை தாலுகா போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.