உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் 

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் 

காளையார்கோவில்: காளையார்கோவில் கஸ்துாரிபாய் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜன.19 அதிகாலை 5:15 மணிக்கு கணபதி ேஹாமம், கோபூஜையுடன் கும்பாபிேஷக பூஜை தொடங்கின. தொடர்ந்து தனபூஜை, மகாலட்சுமி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. ஜன.,21 அன்று ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், நேற்று காலை 7:50 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கின. மகாபூர்ணாகுதி, பிரதான கும்பம் ஆலயம் வருதல், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9:35 முதல் 10:25 மணிக்குள்சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர். மாலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜையும், இரவு 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ