உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழநி தைப்பூசத்திற்கு நகரத்தார் காவடி ஜன.18ல் புறப்பாடு

பழநி தைப்பூசத்திற்கு நகரத்தார் காவடி ஜன.18ல் புறப்பாடு

தேவகோட்டை : தேவகோட்டையில் இருந்து பழநி தைப்பூசத்திற்கு பல ஆண்டுகளாக பக்தர்கள் பாதயாத்திரை சென்று பழநி தண்டாயுதபாணியை நகரத்தார் தரிசித்து வருகின்றனர்.ஜன., 25 ல் தைப்பூச விழா. இதற்காக நகரத்தார் காவடி ஜன., 18 அன்று தேவகோட்டையில் இருந்து புறப்படுகிறது. இதற்காக இன்று நகர பள்ளிகூடத்தில் காவடிகள் அலங்கரிக்கப்பட உள்ளன. பொங்கல் வைத்து காவடியை வழிபடுகின்றனர். நாளை காலை தேவகோட்டை நகரில் காவடிகள் ஊரவலமாக வந்து, சிலம்பணி விநாயகர் கோயில் வருகிறது. ஜன., 18 அன்று கோயிலில் இருந்து காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரையை துவக்குகின்றனர். ராமநாதபுரம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உட்பட சுற்றுப்பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவகோட்டை வருகின்றனர். அவர்களும் சிலம்பணி சிதம்பர விநாயகரை தரிசனம் செய்து பாதயாத்திரையை மேற்கொள்ள உள்ளனர். காவடிகள் பல ஊர்களில் தங்கி 24 ந்தேதி பழநி சென்றடையும் காவடிகளுக்கு அன்னதான மடத்தில் தினமும் பூஜைகள் செய்யப்பட்டு நான்காம் நாள் மகம் நட்சத்திரத்தன்று காவடிகள் மலை ஏறி முருகன் சந்நிதியில் செலுத்தப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை