உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய வாக்காளர் தினம் 

தேசிய வாக்காளர் தினம் 

சிவகங்கை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாளை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, ஜன.,25 அன்று தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் இத்தினத்தை முன்னிட்டு நடந்த பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசு, சான்று வழங்கப்படும்.ஓட்டுச்சாவடிகளில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுச்சாவடி அலுவலர், மேற்பார்வை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, 'voter Helpline' என்ற செயலி மூலமும் https://www.nvsp.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை