| ADDED : நவ 28, 2025 09:05 AM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரம்பரிய ஆயிரம் ஜன்னல் வீடு அருகே நெதர்லாந்து நாட்டினர் சைக்கிள் பந்தயம் குறித்த டாக்குமென்டரி படப்பிடிப்பு நடத்தினர். பாரம்பரிய பங்களாக்கள் நிறைந்த காரைக்குடி செட்டிநாடு பகுதியில் அதிகளவில் சினிமா படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. தமிழ் படங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில படங்களையும் இங்கு எடுக்கின்றனர். நேற்று காரைக்குடி ஆயிரம் ஜன்னல் வீடு பகுதியில் 'சைக்கிள் பந்தயம்' போன்று அதிநவீன கேமராக்கள் மூலம் நெதர்லாந்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் டாக்குமென்டரி படம் எடுத்தனர். இக்குழுவினர் படப்பிடிப்பை தஞ்சாவூரில் தொடங்கி காரைக்குடி, மதுரை, திருவனந்தபுரம், கன்னியாகுமரியில் நடத்த உள்ளனர்.